பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான பிரபாஸ் தற்போது ஓமராவத் இயக்கத்தில் ராமாயண காப்பியத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ஆதிபுருஷ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். ராவணனாக பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகான் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் முதல் ட்ரெய்லர் அண்மையில் வெளியான நிலையில் தற்போது கடைசி ட்ரெய்லரை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்களை கவர்ந்த சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் வருகின்ற 16-ஆம் தேதி 5 மொழிகளில் திரையரங்குகளில் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.