இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த மே 12-ஆம் தேதி கஸ்டடி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஹீரோவாகவும், கீர்த்தி செட்டி ஹீரோயினாகவும் நடித்திருந்தார். படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது கஷ்டடி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூன் 9-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் கஸ்டடி படம் வெளியாகிறது. மேலும் இந்த அறிவிப்பை இயக்குனர் வெங்கட் பிரபு வீடியோ வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.