தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கம் சார்பில் ஒருவேளை இலவச உணவு வழங்கினார்.

இந்நிலையில் வருகின்ற 17-ஆம் தேதி 10 மற்றும் 12-ம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை நடிகர் விஜய் சந்தித்து கல்வி உதவி வழங்க இருக்கிறார். அதன்படி 234 தொகுதிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்குகிறார்.

இந்த விழாவின்போது மாணவர்களுக்கு அறுசுவை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதோடு 2 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் செய்வதற்கும் நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சி தொடர்பாக சென்னையில் உள்ள நீலாங்கரையில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.