தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ரிச்சர்ட் ரிஷி. இவர் மோகன் ஜி இயக்கத்தில் வெளிவந்த திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போது மோகன் ஜி இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் ரிச்சர்ட் ரிஷி நடித்து வருகிறார். அண்மையில் நடிகர் ரிச்சர்ட் நடிகை யாஷிகாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுருந்தார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரப்பினர். இந்நிலையில் நடிகர் ரிச்சர்ட் யாஷிகாவுடனான காதல் குறித்த வதந்திகளுக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதாவது பிரபல கன்னட இயக்குனர் வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் யாஷிகா மற்றும் ரிச்சர்ட்  நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களை தான் ரிச்சர்ட் இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் யாஷிகா மற்றும் ரிச்சர்ட் காதலிக்கவில்லை.