புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள ஆரோவில் அடுத்த ஆலங்குப்பம் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 15-ஆம் தேதி மயான கொள்ளை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு 50 கிலோ மிளகாய் பொடி அபிஷேகம் மற்றும் மஞ்சள், பால், இளநீர், தயிர், எலுமிச்சை போன்ற ஆறு வகையான சிறப்பு அபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பஞ்சாயத்தார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர். மேலும் விழாவின் முடிவில் ஆயிரம் பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மிளகாய் பொடி அபிஷேகத்தை கண்டவர்கள் வியப்புடன் அங்கிருந்து சென்றனர்.