
செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், உதயநிதி தம்பி சொன்னது…. ஆண்டாண்டு காலமாக 100 வருஷமாக அவர் சொன்ன ”சனாதனம்” இந்து மதத்தை எதிர்த்து சத்தியமா இல்லை என்று இங்கு உள்ள எல்லாருக்குமே தெரியும். தலையில் படைத்தான்…. கபாலத்தில் படைத்தான்… எங்கு படைத்தான்… எங்கு இருந்து வருகின்றான் என்று இவுங்க சொல்ல மாட்டாங்க. உடனே இப்போ இதுக்கு ஒரு கேஸ் போடுவாங்க. அவர போற போக்குல…. அவரை பெரிய தலைவர் ஆக்கிட்டாங்க என்பதுதான் உண்மை.
தம்பி உதயநிதி சொன்னது நூற்றுக்கு நூறு இந்து மதத்தை எதிர்த்து அவர் எதுவும் சொன்னதே கிடையாது. நாங்கள் தான் ஆட்சி செய்யணும்… காலில் பிறந்தவன் மலம் அள்ளணும்… தலையில் பிறந்தவுங்க நாங்க… நாங்க தான் ஆட்சி ஆளனும்… தீட்டு, தீண்டாமை இந்த குறிப்பிட்ட விஷயங்களால் ஆண்டு காலமாக நாம் அமுக்கி வைக்கப்பட்டிருக்கிறோம். அந்த கருத்துக்களை தான் சொன்னாங்க. இதை வச்சு அடுத்த நாளே பிரதமர், ஆளுநர் என்று ஆச்சா பூச்சா பண்ணிட்டாங்க.
பெரியார் சொன்ன உண்மையான சமூக நீதியை…. தமிழ்நாட்டில் வீரமணி ஐயா…. திராவிட முன்னேற்றக் கழகத்தினர்…. பெரியார் பெயரை சொல்லிக்கிட்டு இருக்கின்றவுங்க…. வட இந்தியா முழுமைக்கும் அவருடைய இயல், அவருடைய சமூக நீதி கருத்தை சேர்க்காமல் போனதால் வந்த வினை… நான் நடிகனே இல்லப்பா, நீ வேற… உலகத்தில் இரண்டு நடிகர் தான் இருக்கிறார்கள். முதலில் அண்ணாமலை…அதுக்கு மேல மோடி என பேசினார்.