Google Podcast ஆப்ஸ் பயனர்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2 இன்று முதல் இந்த ஆப் வேலை செய்யாது. மேலும் தரவை மாற்றுமாறு பயனர்களுக்கு கூகுள் அறிவுறுத்தியுள்ளது. Youtube மியூசிக் பயன்பாட்டில் பாட்காஸ்ட் போன்ற சேவைகள் வழங்கப்படும் என அது கூறியது. பாட்காஸ்ட் பயன்பாட்டில் உள்ள ஏற்றுமதி சந்தா விருப்பத்தை தேர்ந்தெடுப்பதன் மூலமாக யூடியூப் மியூசிக் பயன்பாட்டுக்கு தரவை மாற்றலாம் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.