சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசுநிவாரணம் அறிவித்து  பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில் நிவாரணத் தொகை ரூ.6000 வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நிவாரணத் தொகையை உரிய நியாய விலை கடைகளின் மூலம் ரொக்கமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

அதேபோல் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக 4 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். சேதமடைந்த குடிசைக்கான நிவாரணம் 5 ஆயிரத்திலிருந்து 8000 ஆக உயர்த்தி வழங்கவும் ஆணை பிறப்பித்துள்ளார்.

33 சதவீதத்துக்கு மேலாக சேதமடைந்துள்ள பயிர்கள் 1 ஹெக்டேருக்கு 17,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்று இருப்பின் 33 சதவீதத்திற்கும் மேலாக சேதமுத்து இருந்தால் ஹெக்டேர் ஒன்றுக்கு 22, 500 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மழையால் பாதிக்கப்பட்ட 33 சதவீதம் அதற்கு மேலாக மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு  8,500 வழங்கிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். எருது,  பசு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழப்பு நிவாரணமாக 37,500 வழங்கவும், வெள்ளாடு  –  ஆடு உயிரிழப்பு நிவாரணமாக 4000 வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதேபோல் சேதமடைந்த படகுகள் மற்றும் மலைகள்  வலைகள் நிவாரண உதவிகளை பொறுத்த வரை முழுமையாக சேதம் அடைந்த கட்டு மரங்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும்,  பகுதியாக சேதமடைந்த கட்டு மரங்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும்,  முழுமையாக சேதம் அடைந்த வல்லம் வகை படங்களுக்கு 1 லட்சம் ரூபாயும்,  முழுவதுமாக சேதம் அடைந்த இயந்திர படங்களுக்கு 7.50 லட்சம் வழங்குவதாகவும்,  சேதம் அடைந்த வலைகளுக்கு ரூ.15,000 வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.