மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6,000 தரப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரொக்கமாக வழங்கப்படும். பாதிக்கப்பட்டோருக்கு அந்தந்த பகுதி ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புயல் வெள்ளத்தினால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ 5 லட்சம் தரப்படும்.  புயல் வெள்ளத்தினால் சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூபாய் 8,000 தரப்படும். மழையினால் பாதிக்கப்பட்ட நெட்பயர் உள்ளிட்ட பாசன பயிர்களுக்கு ரூபாய் 17,000 வழங்கப்படும். எருது, பசு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழப்புக்கு நிவாரணம் ரூபாய் 37 ஆயிரத்து 500, பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதத்திற்கு ஹெக்டேருக்கு 22,500, வெள்ளாடு செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணம் ரூபாய் 4000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500/-லிருந்து, ரூ.17,000 ஆக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.18,000-லிருந்து, ரூ.22,500 ஆக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.