மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது.  மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6000 தரப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முழுமையாக சேதம் அடைந்த கட்டு மரங்களுக்கு தல 50,000 என நிவாரணம் நியாய விலை கடைகள் மூலமாக இந்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

சேதம் அடைந்த குடிசைகளுக்கு 5000 என அறிவித்த நிலையில் தற்போது 8000ஆக உயர்த்தி  வழங்கப்படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.சேதம் அடைந்த குடிசைகளுக்கான தொகை 8000 ஆக உயர்த்தி வழங்க உத்தரவு. எருது, பசு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழப்புக்கு நிவாரணம் ரூபாய் 37 ஆயிரத்து 500. பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதத்திற்கு ஹெக்டேருக்கு 22,500வெள்ளாடு செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணம் ரூபாய் 4000 என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.