சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கவர்த்தா பகுதியில் இருந்து ஒரு மினி லாரி ஒன்று திரும்பி சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் பைகா என்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 30 பேர் பயணித்தனர். இவர்கள் பீடி சுற்றும் தொழிலுக்காக டெண்டு இலைகளை சேகரித்துக் கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். இந்த வேன்  பஹ்பானி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 20 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒரு ஆண் மற்றும் 17 பெண்கள் உட்பட 18 பேர் பரிதாபமாக இறந்தனர். அதன்பிறகு பலர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நேற்று நடைபெற்ற நிலையில் ஓட்டுநர் அதிவேகமாக சென்றது தான் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள சத்தீஸ்கர் முதல்வர் காயமடைந்தவர்களுக்கு நல்ல சிகிச்சை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.