செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், நான் யாரை  பத்தியம் விமர்சனம் பண்ண நான் தயாரா இல்ல.  உலகத்துல ஒரே ஒரு சொல்லு தான்… கடவுள்னு சொல்றதுக்கு எத்தனையோ அர்த்தம் சொல்றாங்க…. லவ் இஸ் காட் என்கிறார்கள்…. அதுக்கப்புறம் இன்னொரு வார்த்தைங்கிறது Truth is Godன்னு உண்மை கடவுளுக்கு சமமானது… உண்மைன்னு தெரியும்போது மனித குணம் ஏற்கும்.

உலகமே கொண்டாடினாலும்,  பொய்ன்னு சொன்னா தூக்கிப்போட்டு காலில் மிதிக்கும். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் கொண்டாடுங்கன்னு சொல்றது தான் நான் சொல்ற செய்தி. பிரபாகரன் எப்போது வருவார் என  நான் கேட்பது சரியான வார்த்தை இல்லை. ஆனால் பேச்சியின்  ஊடாக வந்த…  பொண்ணு சொல்லிட்டு இருக்கும்போது சொன்னது என்னன்னா…..

ஒரு செயல் நடக்குது…. ஒரு கூட்டம் நடக்குது… ஒரு வேலை நடக்குதுன்னா…. முதல்ல யப்பா நீ  போய் என்னனு பாத்துட்டு வா அப்படின்னு சொல்றது புள்ளை கிட்டையோ,  தன்  உதவியாளர் கிட்டயோ…  தன் கூட இருக்கவங்க கிட்டயோ சொல்லி அனுப்புறது உண்டு… அப்படியான ஒரு கட்டமைப்பாகத்தான் நான் துவாரகா வருகையை  பார்க்கிறேன்…..

பேச்சின் ஊடாக தெரிந்து கொண்டேன்… இப்போ எடுத்த உடனே வந்தா ?  இப்போ துவாரகா அவர்கள் வருவதே…  தமிழினமே எவ்வளவு விமர்சனம் பண்ணுது….  இப்போ தலைவர் வராருன்னு சொன்னா….  நீங்க அப்படியே கற்பனை பண்ணி பாருங்களேன்….  வராருன்னு சொன்னா,  இந்த உலகம் எப்படி பாக்கும் ? இந்தியா எப்படி பார்க்கும் ? அவர் வந்ததுக்கப்புறம் வெளிப்பாடு என்ன ? எதிர்வினை என்ன ? சிங்களன் என்ன பண்ணுவான் ? மிகக் கடுமையாக எதிர்த்தது ஜெயலலிதா அவர்களே பாலச்சந்திரன் செத்த போது கண்கலங்கி….

சட்டமன்றத்தில் கண்கலங்கி தீர்மானம் நிறைவேற்றினார்கள்….  இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கணும் என சொன்னாங்க…  குழந்தை என்பது தெய்வத்துக்கு சமமானது….  எங்கள் பிள்ளையும் அப்படித்தான்…  இயற்கை ஒரு வகையான வடிவமைப்பை செய்யும்….  அல்லது தகப்பனாக இருக்கிற ஒருவர்…

தலைவனாக இருக்கிற ஒருவர்….. அல்லது அதை சுற்றி இருப்பவர்கள்…… சில  வியூகத்தை உருவாக்குவாங்க….  அப்படி ஆனது தான்….. துவாரகா அவர்கள் சொல்லும் போது….. எனக்கு சொன்னதாக….. உள்வாங்குனதாக முழுமையாக அல்ல….

வந்து சில வேளைகளில் செஞ்சுட்டு இருக்கும்போது… எது சரியான நேரமோ,  அந்த நேரத்தில் அவர் வருவார் அப்படிங்கற வெளிப்பாடுதான் துவாரகா பேசிய சொல்லாடலில் இருந்தது.சரியான வார்த்தை இல்லைனா கூட….. அது அப்படித்தான் இருக்கும் என தெரிவித்தார்.