சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் இரண்டாம் இடம் பெற்ற கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி துர்கா தேவியின் வீட்டிற்கு ஐந்து நாட்களுக்குள்ளாக இலவச மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த மாணவி மின்சார வசதி இல்லாத குடிசை வீட்டில் படித்து அதிக அளவில் மதிப்பெண் பெற்றுள்ளார். ஏற்கனவே துர்கா தேவி வீட்டுக்கு மின்சாரம் வழங்க முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.