திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆ.எஸ் பாரதி, பெரியார் ராமாயணத்தை ஏதிர்த்து பிரசாரம் செய்த போது தேர்தல் நடந்தது. தேர்தல்முடிவு என்ன தெரியுமா ? திராவிட முன்னேற்ற கழகம் 184 இடங்களிலே வெற்றி பெற்று,இதுவரையில் அந்த ரெக்கார்டை யாரும் உடைக்கவில்லை. 16 இடத்திலேயே தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். அந்த அணி வெற்றி பெற்றது. நம்முடைய கூட்டணியோடு சேர்த்து 220 இடங்களில் தமிழ்நாட்டிலேயே திமுகவினுடைய கூட்டணி வெற்றி பெற்றது.

பாராளுமன்றத்திற்கு காமராஜர் ஒருவரை தவிர, எஞ்சி இருக்கக்கூடிய 24 தொகுதியிலும் திமுக வெற்றி பெற்றது. எந்த டெல்லியில் போய் ”சோ” பேசினாரோ,  அந்த டெல்லியில் இருந்து தமிழ்நாடு வரை இந்திரா காந்திக்கு மிகப்பெரிய வெற்றி தேடி கொடுத்து…  2/3 மெஜாரிட்டியோடு அம்மையார் ஆட்சிக்கு வந்தார் என்பது வரலாறு.

இங்க பேராசிரியர் வந்திருக்கிற காரணத்தால்…  ஒரு 52 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரலாறு திரும்பி இருக்கிறது. எந்த ராமரை வைத்து,  அன்றைய தினம் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழித்து விடலாம் என்று சொல்லி தேர்தலில் பேசினார்களோ….. அதே கூட்டம் இப்பொழுது  கர்ஜித்துக் கொண்டிருக்கிறது.

ஒன்றை மட்டும் சொல்கிறேன். தலைவர் கலைஞருடைய மகன் மு.க ஸ்டாலின் அவர்கள், 1971 தேர்தலிலே எப்படி திமுக வெற்றி கொடி நாட்டியதோ, அதேபோல தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை 2024இல் தேர்தலில் வெற்றி பெற்று காட்டுவோம். காரணம்  என்னவென்று கேட்டால் ? இப்போது தான் நம்ம ஆளுங்களுக்கு சொரணையே வருது.

ரொம்ப பேரு சொரணை இல்லாம இருந்தான். நம்மளே சொரணை இல்லாம ஆகிட்டோம்.  ஓட்டுக்காக எல்லாத்தையும் மறந்துட்டோம்.  மனசாட்சிக்கு விரோதமா எல்லாம் சிலது பேசணும். நம்ம கிட்ட இருக்கிற இளைஞர்களுக்குகே நாம் யார் என்பதை சரியாக சொல்லவில்லை. ஆனால் அதை எல்லாம் பழைய கதையை சொல்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பை பாஜக கொடுத்திருக்கிறது என தெரிவித்தார்.