
செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற புராதான சின்னங்களான திருக்கோவில்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களை கண்டறிந்து அவைகளை ஆவணப்படுத்தி இருக்கின்றோம். அதில் 518 திருக்கோயில்கள் வருகின்றன. இந்த திருக்கோவில்களுக்கு திருப்பணி மேற்கொள்வதற்கு அரசு சார்பிலேயே நிதியினை கோருகின்ற 2022-23 ஆம் ஆண்டு சுமார் 100 கோடி ரூபாயை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அரசு மானியமாக வழங்கினார்.அதேபோல் 2023-24 இந்த ஆண்டு 100 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கியிருக்கின்றார்.
இந்த 200 கோடி ரூபாயை சேர்த்து பக்தர்கள் நன்கொடையாக சுமார் 140 கோடியே வழங்கி இருக்கின்றார்கள். 340 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோவில் திருப்பணிகளை இன்றைக்கு இந்து சமய அறநிலைத்துறை மேற்கொண்டு செயலாற்றி வருகின்றது. ஒரு கால பூஜை திட்டத்தை எடுத்துக் கொண்டால் ஒரு திருக்கோயிலுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்று அரசு வைப்பு நிதியாக வைத்திருந்தது.
அந்த ஒரு லட்சம் ரூபாயில் வருகின்ற வட்டி தொகையில் திரு கோயில்களுக்கு தேவையான தினசரி பூஜைகளுக்கு செலவிட முடியாத நிலை இருந்ததால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கவனத்தில் எடுத்துச் சென்றவுடன். அந்த ஒரு லட்ச ரூபாயை இரண்டு லட்சம் ரூபாயை ஆக்கி 129 கோடி ரூபாயை அரசு மானியமாக ஒரே தவணையாக வழங்கியவர் மாண்புமிகு தமிழக முதல்வர்.
அதோடு மட்டுமல்லாமல் அந்த திருக்கோவில்களே பணியாற்றுகின்ற அர்ச்சகர்களுக்கு எந்தவிதமான பணி பயன் இல்லாமல் இருந்த நிலையில், ஒவ்வொரு அர்ச்சகர்களுக்கும் 1000 ரூபாயை ஊக்க தொகையாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இன்றைக்கு 17,000 திருக்கோயில்களில் ஆயிரம் ரூபாய் என்று அர்ச்சகர்களுக்கும், பணியாளர்களுக்கும் வழங்குகின்ற ஆட்சி மாண்புமிகு தமிழக முதல்வர் தலைமையில் அமைந்திருக்கின்ற ஆட்சி என பெருமையோடு தெரிவித்தார்.