கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 189 பேர் கொண்ட அந்தப் பட்டியலில் 52 புதுமுகங்கள் உள்ளனர். புதிய தலைமுறை தலைவர்களை சட்டசபைக்கு கொண்டு வருவதே எங்கள் நோக்கம் என்று பாஜக கூறியிருக்கிறது. இந்தப் பட்டியலில் 8 பெண்களும் 9 மருத்துவர்களும் இருக்கின்றனர். 32 பிற்படுத்தப்பட்டோர், 30 SC, 16 ST அடங்கிய பட்டியல் வெளியாகியிருக்கிறது.