தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், ஒவ்வொரு சனிக்கிழமையிலும் பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கமாக இருந்து வந்தது.

ஆனால், கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த வார சனிக்கிழமை நடைபெறவிருந்த அவரது பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டது. இதே நேரத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய நாயின் பின்னால் மறைந்து நிற்கும் புகைப்படத்தை சமூக ஊடக தளம் X-இல் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு, விஜய் தலைமறைவு என்கிற குறிக்கோளுடன் பரவலாகப் பேசப்படுகிறது.

“>

 

இந்த பதிவை பலரும் விஜயை மறைமுகமாக விமர்சிக்கும் முயற்சியாகக் கருதினர். இதனைத் தொடர்ந்து, தவெக தொண்டர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கட்சி ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் உதயநிதியின் பதிவை கண்டித்ததோடு, கரூர் சம்பவத்தால் துயரத்தில் உள்ள வேளையில் இத்தகைய சாடல் தேவையற்றது என தெரிவித்துள்ளனர். இதனால், இரு கட்சிகளுக்கிடையேயான அரசியல் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.