சமூக வலைதளங்களில் சமீபத்தில் தேர்வு அறை ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தேர்வு நடந்து கொண்டிருக்கும் போது, ஒரு மாணவர் பிட் அடித்து தேர்வு எழுதுவதை ஆசிரியர் கச்சிதமாகக் கண்டுபிடித்து விடுகிறார்.
மேலும் தான் மாட்டிக் கொண்டதை உணர்ந்த அந்த மாணவர், அடுத்த கணமே தான் மட்டும் தண்டனை பெறக்கூடாது என்று நினைத்து, வகுப்பறையில் இருந்த ஒட்டுமொத்த மாணவர்களின் குட்டையும் உடைத்து விடுகிறார். வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் எங்கெல்லாம் துண்டு சீட்டுகளை மறைத்து வைத்துள்ளனர் என்பதை ஆசிரியரிடம் ஒவ்வொன்றாகக் காட்டிக் கொடுத்து, முழு வகுப்பறையையும் ஆசிரியரிடம் சிக்க வைக்கிறார்.
This might be the most legendary classroom revenge ever. 🤣 pic.twitter.com/TTXfasgzp6
— AdyaKali ( HINDU ) (@satishshar1) June 28, 2026
“>
இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களின் வேடிக்கையான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். “அவன் தனியாக மூழ்க விரும்பவில்லை, ஒட்டுமொத்த வகுப்பையுமே தன்னோடு சேர்த்து மூழ்கடித்துவிட்டான்” என்றும், “இது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்” என்றும் நெட்டிசன்கள் கிண்டலாகக் கூறி வருகின்றனர். தேர்வில் பிட் அடித்து மாட்டிக் கொண்ட மாணவர், சக மாணவர்களையும் காட்டிக் கொடுத்த இந்த நகைச்சுவையான வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.
