இந்தியாவில் நீண்ட காலமாக வசித்து வரும் டொமினிகா படாலாஸ்-கல்ரா என்ற போலந்து நாட்டு பெண்மணி, இந்திய கடைக்காரர் ஒருவரின் நேர்மையைப் பாராட்டி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதோடு அவர் ஒரு மருந்துக் கடையில் சில மருந்துப் பொருட்களை வாங்கியுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த மருந்துப் பையை கடையிலேயே மறந்து வைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார். நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்தக் கடைக்குச் சென்றபோது, அந்த கடைக்காரர் அந்தப் பையை பத்திரமாக எடுத்து அவரிடம் ஒப்படைத்துள்ளார்.
Polish Woman Praises Indian Shopkeeper’s Honesty In Viral Video: ‘Love This Country’ https://t.co/qQBjNCvob1
“>
இந்த நேர்மையான செயலால் நெகிழ்ந்துபோன டொமினிகா, இந்தியர்களின் இந்த குணத்தைப் பாராட்டி “ஐ லவ் திஸ் கன்ட்ரி” என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, பல நெட்டிசன்களும் தங்களுக்கு இந்தியாவில் நடந்த இதேபோன்ற சுவாரசியமான மற்றும் நெகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் காய்கறி வியாபாரிகள் முதல் மருந்துக் கடைக்காரர்கள் வரை இந்தியாவில் உள்ள சாதாரண மனிதர்கள் பலர், வாடிக்கையாளர்கள் மறந்து வைத்துவிட்டுச் செல்லும் மொபைல் போன், பணம் அல்லது பொருட்களை எப்படி பத்திரமாகத் திருப்பித் தருகிறார்கள் என்பதைப் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் “இது இந்தியாவில் மட்டுமே சாத்தியம்” என்றும், அந்தப் பெண்மணி இந்தியாவின் நேர்மறையான பக்கத்தை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டுவதாகவும் கூறி நெட்டிசன்கள் கடைக்காரரின் நேர்மையையும், அந்தப் பெண்ணின் அன்பையும் பாராட்டி வருகின்றனர்.
