சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் பயணித்த காரும், ஒரு ஸ்கூட்டியும் மோதிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தரப்பு இதை “தவறுதலான விபத்து” என கூறியுள்ளதாலும், மற்றொரு தரப்பு “திட்டமிட்ட சதி” எனக் குற்றம்சாட்டியுள்ளதாலும், சமூக வலைதளங்களில் இதைச் சுற்றி கடும் விவாதம் நீடித்து வருகிறது. குறிப்பாக, உயர்நீதிமன்றம் அருகே, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பாக அக்டோபர் 7 அன்று நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து பிரபல இயக்குநர் பா. ரஞ்சித் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “இது தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்ட சதி என திருமாவளவன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில் @CMOTamilnadu, @mkstalin, @tnpoliceoffl ஆகியவற்றையும் குறித்திருந்தார். பா. ரஞ்சித்தின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, திருமாவளவனின் பாதுகாப்பு குறித்து புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
உயர்நீதிமன்றம் அருகே தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு கடந்த அக்டோபர் -07 அன்று
காரை வழிமறித்த நிகழ்வு ‘தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி என்று
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், அண்ணன் திரு.தொல்.திருமாவளவன் @thirumaofficial அவர்கள் தெரிவித்துள்ளார்,
இதை… https://t.co/KWDlSwMr0S— pa.ranjith (@beemji) October 10, 2025
“>
