சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி விவரங்களும் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசின் அதிகார வரம்பில் தான் வரும். மாநிலங்கள் தனித்தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் குழப்பம் ஏற்படும் என கூறியுள்ளார்.