ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னம்பட்டி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை செல்வராஜ் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தார். அப்போது சிலிண்டரில் கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து செல்வராஜ் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் டிவி, பீரோ, கட்டில், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.