அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் அலையிலிருந்து கிளிஞ்சல்களை ஏற்றிக்கொண்டு சாத்தூர் நோக்கி ஒரு லாரி சென்றது. அந்த லாரியை துரைசிங்கம் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் கீழையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கிளிஞ்சல்களின் ஒரு பகுதி எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் டீசல் டேங்க் வெடித்து விபத்து நடைபெறாமல் தடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.