விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிறுவந்தாடு காந்திநகர் காலனியில் குப்பு என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் குப்புவின் கூரை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் அருகில் இருந்த ராமச்சந்திரன் என்பவரது கூரை வீட்டிற்கும் தீ வேகமாக பரவியது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீடுகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் வீட்டு உபயோக பொருட்கள், துணிமணிகள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.