கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலசங்கரன்குழி வடலிவிளை பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கண்ணக்குறிச்சி பகுதியில் சொந்தமாக தும்பு ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில் காய வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தும்புகளில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்த தொழிலாளர்கள் அதனை அணைக்க முயன்றனர்.

ஆனால் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விடிய, விடிய நடந்த போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 25-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் கருகி சேதமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.