FIFA 2023 மகளிர் உலகக் கோப்பையின் ஒன்பதாவது சீசன் இம்மாதம் 20ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 20ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. உலகக்கோப்பை தொடர் என்றாலே ஏதேனும் ஒரு நாடு நடத்தும். ஆனால் இந்த FIFA 2023 மகளிர் உலகக் கோப்பை போட்டியை நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவும் இணைந்து நடத்த உள்ளது.

1988ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை FIFA ஆண்கள் உலகக் கோப்பை எந்தெந்த விதிமுறைகளை கடைபிடித்ததோ அவற்றைப் பின்பற்றியே  மகளிர் உலகக்கோப்பை தொடரும் நடக்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.