விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் செர்பியாவின் சாம்பியன் ஜோகோவிச்சை  வீழ்த்தி 20 வயதான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் சேம்பியன் பட்டம் வென்றார். முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ் விம்பிள்டன் கோப்பைக்கு முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். விம்பிள்டனில் தொடர்ந்து வெற்றியை மட்டுமே சந்தித்து வந்த ஜோகோவிச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து அல்காரஸ் வெற்றி பெற்றுள்ளார். இதனை அடுத்து சாம்பியன் பட்டம் பெற்ற அல்காரஸுக்கு 24. 50 கோடி பரிசு தொகையும் இரண்டாவது இடத்தை பிடித்த ஜோகோவிச்சுக்கு 12.25 கோடி ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து அல்காரஸ்  பேசுகையில், “ஜோகோவீச்சை பார்த்து தான் நான் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தேன். நான் பிறந்த சமயத்தில் அவர் பல பட்டங்களை வென்றுள்ளார். அவரை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சியை கொடுக்கிறது” எனக் கூறியுள்ளார். தனது தோல்வி குறித்து ஜோகோவிச் கூறுகையில் “அல்காரஸுக்கு எனது வாழ்த்துக்கள். சிறந்த வீரரிடம் தான் தோல்வியுற்று உள்ளேன். தோற்கவேண்டிய பல சாம்பியன் பட்டங்களை வென்ற நான் வெல்ல வேண்டிய பட்டத்தை தோற்று விட்டேன். இதனால் இரண்டும் சமமாகிவிட்டது” என கூறியுள்ளார்.