தல தோனிக்கும் சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையே இருக்கும் நட்பு அனைவருக்கும் தெரிந்ததுதான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவர்கள் இருவரும் களத்தில் இறங்கினால் ரசிகர்களுக்கு அளப்பரிய ஆனந்தம் ஏற்படும். அவ்வளவு ஒற்றுமையாக விளையாட்டிலும் வாழ்க்கையிலும் இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் ரெய்னா தோனியின் மிகப்பெரிய ரசிகர். இந்நிலையில் சமீபத்தில் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது நெதர்லாந்தில் உள்ள சுரேஷ் ரெய்னாவுக்கு சொந்தமான ரெஸ்டாரன்ட் ஒன்றில் தோனியின் ஜெர்சி பிரேம் போட்டு மாட்டப்பட்டுள்ளது. இதைப் பார்த்த தோனி – ரெய்னா ரசிகர்கள் நட்பென்றால் இப்படி இருக்க வேண்டும் என்றும் இதுபோல நட்பு கிடைக்க அதிர்ஷ்டம் வேணும் என்றும் பலவாறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.