தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பு பெற்றதால் தற்போது பிச்சைக்காரன் 2 படத்தின் மீதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் பிச்சைக்காரன் 2 படத்தின் டிரைலர் வீடியோ இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது. பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் இரண்டு பாடல்கள் மற்றும் ஸ்னீக் பீக் காட்சி போன்றவைகள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று காலை டிரைலர் வீடியோவை படக்குழு வெளியிட இருக்கிறது. மேலும் பிச்சைக்காரன் 2 படம் மே 19-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.