“தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் முதல் ராஜ்யசபா எம்பி வேட்பாளராகத் தான் அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, காங்கிரஸ் பிரவீன் சக்ரவர்த்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு தற்போது தமிழக அரசியலில் புதிய பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.
பிரவீன் சக்ரவர்த்தியின் அந்தப் பதிவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) தற்பொழுது மிகக் காரசாரமாகவும் அதிரடியாகவும் மறுப்புத் தெரிவித்து ஒட்டுமொத்த கூட்டணியையுமே அதிர வைத்துள்ளது. ‘புதிய கூட்டணியின் சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டு இருப்பதாகக் கூறி, அதில் சிபிஐ(எம்) பெயரையும் சேர்த்திருப்பது முற்றிலும் தவறானது மற்றும் அப்பட்டமான பொய்’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்கமாகச் சாடியுள்ளது.
மேலும், ‘இப்படி ஒரு புதிய கூட்டணி அமைப்பது குறித்தோ அல்லது இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் இதுவரை எங்களை அணுகவும் இல்லை, எங்களோடு ஆலோசிக்கவும் இல்லை; தவெக ஆட்சி அமைக்க நாங்கள் எதன் அடிப்படையில் ஆதரவு தந்துள்ளோம் என்பதை ஏற்கனவே மிகத் தெளிவாகக் கூறிவிட்டோம்’ என விளக்கியுள்ள அக்கட்சி, ‘பிரவீன் சக்ரவர்த்தி அவர்களின் இந்த பதிவை வெறும் அறியாமை என்று கடந்துவிட முடியாது, இது சுத்த ‘அதிகப் பிரசங்கித்தனம்’ என்றுதான் சொல்ல வேண்டும்’ என முகத்திற்கு நேராக மரண ஆக்ரோஷப் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது.
எம்பி சீட் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்துள்ள இந்த ஷாக், அறிவாலயம், சத்தியமூர்த்தி பவன் மற்றும் தவெக வட்டாரங்களை ஒரே நேரத்தில் கதிகலங்க வைத்துள்ளது.”
புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட்… pic.twitter.com/mWOp1pxO50
— Shanmugam P (@Shanmugamcpim) June 5, 2026
“>
