தமிழக வெற்றி கழகம் ராஜ்யசபா எம்பி பதவியை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்த நிலையில் தமிழகத்தில் இருந்து பிரவீன் சக்கரவர்த்தி எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் நன்றி தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டார். அந்த பதிவில், தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன் என் மீது நம்பிக்கை வைத்த ராகுல் காந்தி மற்றும் தமிழக CM விஜய் க்கு மனமார்ந்த நன்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு தற்போது திமுக கூட்டணியில் நீடிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு கொடுத்த நிலையிலும் தாங்கள் திமுக கூட்டணியில் தொடர்வதாக ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சிகள் தெளிவுபடுத்தியுள்ளது. அப்படி இருக்கும்போது புதிய கூட்டணிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெயரையும் சேர்த்ததால் சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது. கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது. பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை “அதிக பிரசங்கித்தனம்” என்று தான் சொல்ல வேண்டும்.
புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட்… pic.twitter.com/mWOp1pxO50
— Shanmugam P (@Shanmugamcpim) June 5, 2026
