அமெரிக்க நட்சத்திரம் கிம் கர்தாஷியனை போல தோற்றமளிக்க சர்ஜரி செய்த மாடல் அழகி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நியூயார்க்கை சேர்ந்த கிறிஸ்டினா ஆஸ்டன் கோர்கானி (34) என்ற மாடல் அழகி ஏற்கனவே பல சர்ஜரி செய்திருந்தார். சமீபத்தில், மற்றொரு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. அந்த சர்ஜரி முடிந்த சில மணி நேரங்களிலேயே மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.