தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்டி ராமராவின் 100-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை என்டி ராமராவ் குடும்பத்தினர் செய்துள்ளனர். இன்று விஜயவாடாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் என்டி ராமாராவின் பேரன்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப் படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் என்டி ராமாராவின் மகனான பிரபல நடிகர் பாலகிருஷ்ணா தன் தந்தையின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இன்று விஜயவாடாவுக்கு சென்றார். விமானம் மூலம் கண்ணவரம் ஏர்போர்ட்டுக்கு சென்ற நடிகர் ரஜினியை பாலகிருஷ்ணா உட்பட அவருடைய குடும்பத்தினர் வரவேற்றனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.