ஒரு முக்கிய பாடிபில்டிங் போட்டியில், நடுவர்களின் தீர்ப்பு தவறாக இருந்ததாகக் கூறி ‘கோஸ்ட் ஸ்குவாட்’ கோகுல் சீனிவாசன் மேடையிலேயே கடும் ஆவேசத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பல மாதங்களாக ரத்தமும் வியர்வையுமாகச் சிந்தி உழைத்த வீரர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், “ஃபேக் ஜட்ஜ்மெண்ட்” கொடுத்த நடுவர்களைப் பார்த்து சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

​”ஒருத்தன் எவ்வளோ கஷ்டப்பட்டு வர்றான்னு தெரியுமா? தப்பான தீர்ப்பு கொடுத்து அவனோட வாழ்க்கையை ஏன் கெடுக்குறீங்க?” என்ற ரீதியில் அவர் ஆவேசமாகப் பேசிய வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. தகுதியான வீரர்களை விட்டுவிட்டு, மற்றவர்களுக்குப் பதக்கம் வழங்கப்பட்டதை அவர் நேரடியாகத் தட்டிக்கேட்ட விதம், அந்த இடத்தையே அதிர வைத்தது. விளையாட்டுத் துறையில் நடக்கும் அரசியல் மற்றும் தவறான தீர்ப்புகளுக்கு எதிராக அவர் காட்டிய இந்த ‘கோபம்’ இப்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.