சீனாவில் வியாபாரத்தைப் பெருக்குவதற்காக கடை உரிமையாளர்கள் கடைப்பிடிக்கும் ஒரு விசித்திரமான பழக்கம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமாக ஒரு கடை சுத்தமாக இருந்தால் தான் மக்கள் வருவார்கள் என்று நாம் நினைப்போம். ஆனால் சீனாவில் நிலைமை தலைகீழாக உள்ளது. ஒரு கடையின் முன்னால் எவ்வளவு அதிகமாகக் குப்பைகளும், உணவுப் பொட்டலங்களும் சிதறிக் கிடக்கிறதோ, அந்த அளவிற்கு அந்தக் கடையில் வியாபாரம் “பிஸியாக” நடப்பதாக மக்கள் நம்புகிறார்களாம்.
🇨🇳 Chinese shop owners throw random food and material outside of their shops to make it look "busy".
In China, if a shop is busy, it means there's a lot of garbage everywhere on the ground next to it. pic.twitter.com/dNKWVYRK5J
— 鈴森はるか 『haruka suzumori』 🇯🇵 (@harukaawake) December 21, 2025
இதற்காகவே பல கடை உரிமையாளர்கள், தங்கள் கடையின் முன்னால் வேண்டுமென்றே உணவுகளையும், காகிதங்களையும் வீசி எறிந்து குப்பைக்காடாக மாற்றும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. “அதிகமான மக்கள் வந்து சென்றால் தான் இவ்வளவு குப்பை சேரும்” என்ற மக்களின் உளவியலை (Psychology) பயன்படுத்தி இந்த நூதன மோசடி அரங்கேறி வருகிறது. சுத்தத்தை விட வியாபார தந்திரமே முக்கியம் எனக் கருதும் சீனர்களின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
