224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய Asia net tv கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி, பாஜக 94-117, காங்கிரஸ் 91-117, ஜேடிஎஸ் 14-24. மற்றவை 0-2 இடங்கள் கைபற்றும் என தெரிவித்துள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை காட்டிலும் அதிகம் பெற்று பாஜகவே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுவரை வெளியான பல கருத்துக்கணிப்புகள் காங்., கட்சிக்கு ஆதரவாக வந்தாலும் ஆட்சியை பிடிப்பது மிகவும் கடினம் என்பதுதான். ஆட்சியை பிடிக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்., 107 – 117 வரை வெற்றிபெறும் என கூறப்பட்டாலும், சில இடங்களில் பாஜக டப் பைட் கொடுத்து வெற்றிபெறவும் வாய்ப்புள்ளது. இதனால், கடந்த தேர்தலில் நடந்தது போலதான், தற்போது கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.