அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்பது கருத்துக் கணிப்பு மட்டுமல்ல, அதுதான் உண்மையும் கூட. மேலும் மிகப்பெரிய அளவில் அரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், காஷ்மீரில் வேட்பாளர்கள் கிடைக்காத பா.ஜ.கவுக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்குமே தவிர எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து ஜி.எஸ்.டி மூலமாக 1000 கோடிகளை பெற்றுக் கொண்டு வெள்ளம் வந்த போதும், மழை பெய்த போதும் நிவாரண தொகைகளை அளிக்காமல் நம்மை வாட்டுகின்றனர். அதோடு வரியாக கொடுத்த பணத்தை நிவாரணமாக கேட்டால் அவர்கள் வீட்டு பணத்தை கேட்பது போல திருப்பிக் கொடுக்க மறுக்கிறார்கள்.
இதனால் மத்திய அரசுக்கு மனிதத்தன்மை இருக்கிறதா என கேட்கத் தோன்றுகிறது. மேலும் 100 நாட்களை தாண்டிய பா.ஜ க கூட்டணி அரசு 150 நாட்களை தாண்ட முடியாது. விரைவில் அவர்கள் வீழ்ந்து விடுவார்கள் என்று திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த இ.வி.கே.எஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.