தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை பதிவு செய்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜயை வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகை திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் விஜயுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து எல்லாவற்றிற்கும் மிகவும் நன்றி விஜய் அண்ணா என்று பதிவிட்டுள்ளார். அதோடு ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.