தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் தற்போது நடிகர் விஜயை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று தன்னுடைய பிறந்தநாளை லியோ படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடுகிறார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ பட குழுவினர் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் லியோ படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு மகனாக சகோதரனாக  என் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் லோகேஷ் கனகராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.