சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்திலிருந்து நடிகராக வேண்டும் என வந்தவர்தான் லெஜண்ட் சரவணன். இவர் தி லெஜண்ட் எனும் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகி உள்ளார். இந்த படம் பெரிய அளவில் ஹிட் இல்லை என்றாலும் ஓரளவிற்கு ஓடியது என்றே சொல்லலாம்.

சமீபத்தில் தான் தி லெஜண்ட் திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி இருந்தது. விரைவில் தன் அடுத்த திரைப்படம் குறித்த தகவலை வெளியிடுவேன் என்று லெஜண்ட் சரவணன் கூறியிருந்தார். இந்நிலையில் அவரது புது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட நம்ம லெஜண்ட் சரவணனா இது?.. என ஆச்சரியமாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.