செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  40 தொகுதியில் வென்றால் நாம் சொல்லும் நபர் தான் பிரதமர் என ஸ்டாலின் சொன்னது பூனை பகல் கனவு காணுமாம், அது மாதிரி தான், இது ஒரு பகல் கனவு. கானல் நீர் மாதிரி.  பார்ப்பதற்கு நீர் இருக்கிற மாதிரி தெரியும்… ஆனால் நீர் இருக்காது…. அந்த மாதிரி தான் நடக்காத விஷயம்…

ஊருக்கு போகாத ஒரு விஷயத்தை இன்னைக்கு ஸ்டாலின் சொல்லுகிறார்… இது  நடக்கப் போவது கிடையாது. நடக்கப்போவது நாற்பதும் நமதே,  நாடும்   நமதே என்ற அடிப்படையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்…..   எங்களுடன் சேரும் கூட்டணி கட்சிகள் எல்லோரும் சேர்ந்து நாங்க 40யும் வெற்றி  பெறுவோம். அதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை.

அதிமுகவுக்கு  மக்கள ஆதரவு அலை  இருக்கிறது. எவ்வளவோ பிரச்சனைகள்… அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை நிறைவேற்ற வில்லை…  ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றவில்லை…. அவுங்க   வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறக்க விட்டார்கள்….  நீட்டிற்கு நாங்கள் முதல் கையெழுத்து போடுவோம் என்று சொல்லிக்கொண்டு ஐம்பது லட்சம் கையெழுத்து கூட வாங்க முடியாமல் பள்ளிக்கூடத்திற்கு போய் LKG பசங்க கிட்ட எல்லாம் கையெழுத்து  வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஐம்பது லட்சம் பேருக்கு வாங்க முடியவில்லை… அதுக்கு  ஆதரவு இல்லை என்று தெரிந்து விட்டது. ஒரு கையெழுத்து போட்டு நீட்டை ஒழிக்கின்றோம் என்று சொன்னார்கள்…..  இன்றைக்கு 50 லட்சம் கையெழுத்து என்று சொல்லி ஊரை ஏமாற்றும் விஷயத்தை ”காதில் பூ சுத்துகின்ற”  விஷயத்தை மக்கள் உணர்ந்து விட்டார்கள் என தெரிவித்தார்.