கோவை வஉசி மைதானத்தில் இப்போது திறக்கப்பட்டுள்ள எங்கள் முதல்வர் எங்கள் பெருமை எனும் முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட திமுகவினர் பலர் உடன் இருந்தனர்.

அதனை தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதாரணமாக இந்நிலைமைக்கு வரவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு ஒரு கடைசி தொண்டனாக கட்சியிலிருந்து இப்போது இந்த நிலைமைக்கு வந்திருப்பதை அழகாக இந்த புகைப்பட கண்காட்சியில் எடுத்துக் கூறியுள்ளார்கள்” என்று தெரிவித்தார்.