தஞ்சையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு கூட்டம் மற்றும் எந்த திட்டத்தையும் ஒன்றிய அரசு நடைமுறைபடுத்தும்போது மாநில அரசின் ஒத்திசைவோடு அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதையடுத்து கி.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது “டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டமானது ரத்து எனும் அறிவிப்பு முதற்கட்ட வெற்றியாகும்.

தமிழ்நாடு முதல்வர் உரிய நேரத்தில், உரிய வேகத்தில் எடுத்த நடவடிக்கைகள் தான் ஒன்றிய அரசின் இத்தகைய முடிவுக்கு காரணம். இந்த பிரச்சினையில் விவசாயிகள், அனைத்துக் கட்சியினர் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். ஒன்றிய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை இந்த அறிவிப்புக்கு தான் தான் காரணம் போல் காண்பித்துக்கொள்வது என்பது அவர் எப்போதும் வாடகை தாயாக இருந்தே பழகியவர் என்பதை காட்டுகிறது” என்று அவர் தெரிவித்தார்.