உலகெங்கிலும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் 1 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இதில் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லை. தற்போது சோஷியல் மீடியாவில் சுட்டிக் குழந்தையின் க்யூட்டான வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு குழந்தை ஸ்மார்ட்போனில் YouTube வீடியோ பார்த்துக்கொண்டிருக்கிறது. அப்போது ஒரு நபர் அந்த குழந்தை பார்த்துக்கொண்டிருக்கும் YouTube வீடியோவை Off செய்து Back வந்துவிடுகிறார். எனினும் அந்த குழந்தையோ அசால்டாக மீண்டும் YouTube பக்கத்திற்கு சென்று வீடியோவை ஓபன் செய்து பார்த்துக்கொண்டிருக்கிறது.

ஒரு குழந்தை தனக்கு பிடித்தமான ஒன்றை கண்டு ரசிப்பதற்காக அதை எப்படி பார்க்க வேண்டும் என அத்தனையும் கவனித்து தானாக கற்றுக் கொண்டுள்ளது. எனவே கற்றல் திறனும், கற்பதற்கான ஆர்வமும் ஒரு வயது குழந்தைக்கு உண்டு என்பது இதிலிருந்து வெளிப்படையாக தெரிகிறது.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் எதன் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார்கள் என்பதை உற்று கவனித்து, அதன் வழியாகவே நல்ல தகவல்களை அவர்களுக்கு கொண்டு சேர்த்து, கற்பித்தால் அந்த குழந்தைகளின் எதிர்காலம் நல்லபடியாகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

https://www.seithisolai.com/ennapa-nadakuthu-enge-entha-vayasuleye-eppadiya-sutikulanthaiyin-kiut-vidiyo.php

“எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும், தீயவராவதும் சுற்றியுள்ளவர்களின் செயல்களின் அடிப்படையிலே” எனவே குழந்தைகள் முன்பு நல்லதே பேசுவோம் ! நல்லதே செய்வோம் ! நல்லதே கற்பிப்போம்!