சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது.

அந்த வீடியோவில் ஒரு பெண்ணுடன் பல பாம்புகள் ஒன்றாக காணப்படுகிறது. அந்த பெண் பாம்புகளுடன் தைரியமாக படுக்கையில் இருக்கிறார். சில நேரங்களில் அப்பெண் வெளியில் பாம்புகளுடன் விளையாடுகிறார். மேலும் அப்பெண் பாம்புகளை தட்டிக்கொடுத்து அதை உறங்க வைப்பதையும் வீடியோவில் காண முடிகிறது.