தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கிடுவதற்கான ஊதிய உச்சவரம்பு 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 21,000 ரூபாயாக உயர்த்தப்பட இருக்கிறது. இந்த உச்சவரம்பு உயர்வு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையை அதிகரிக்கச் செய்யும். இதனால் ஓய்வூதிய திட்டத்திற்கு கொடுக்கப்படும் தொகையும் அதிகமானதாக இருக்கும்.
இந்த உச்சவரம்பு உயர்வினால் அதிகபட்சமாக 15 ஆயிரம் ரூபாயாக கணக்கிடப்படும் ஓய்வூதியம் 21,000 ரூபாயாக இனி கணக்கிடப்படும். இது தங்களின் வயது முதிர்வு காலத்தில் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ விரும்பும் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.
