ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி பேட்டிங்கால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
குறிப்பாக கடந்த போட்டியில் 36 பந்துகளில் சதம் விளாசி மிரட்டிய இவரை எப்படி கட்டுப்படுத்துவது எனத் தெரியாமல் எதிரணிகள் திணறி வருகின்றன.
இந்நிலையில், இன்று நடைபெறும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 40-வது லீக் போட்டியில், பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குக்கு அனுபவ வீரர் புஜாரா ஒரு முக்கிய ஆலோசனையை வழங்கியுள்ளார்.
வைபவ்வுக்கு எதிராக அர்ஷ்தீப் சிங் தேவையில்லாத பரிசோதனைகளை செய்யாமல், ஸ்டம்புக்கு வெளியே பந்து செல்லும் வகையில் சரியான ‘லைன் அண்ட் லெந்த்’-ல் வீச வேண்டும் என்றும், குறிப்பாக ஸ்லோ
டெலிவரிகள் மற்றும் யார்க்கர்களைத் துல்லியமாகப் பயன்படுத்தினால் மட்டுமே இந்த குட்டி ஜாம்பவானை வீழ்த்த முடியும் என்றும் புஜாரா கூறியுள்ளார்.
நடப்புத் தொடரில் 8 போட்டிகளில் 230-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் 357 ரன்களைக் குவித்துள்ள வைபவ்வை வீழ்த்துவது அர்ஷ்தீப் மற்றும் சேவியர் பார்ட்லெட் போன்ற பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
