இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு பணியில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய காலத்திற்கு பின் உதவும் விதமாக மாதம் தோறும் அரசு சார்பாக பென்ஷன் தொகை வழங்கப்படுகிறது. அதே போல் epfo அமைப்பு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இதனை பெறுவதற்கு ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும்.

மேலும் ஓய்வூதிய தொகை மாதம் தோறும் தவறாமல் பெற வருடம் தோறும் தங்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் தற்போது ஓய்வூதியதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலமாக வீட்டில் இருந்தபடியே ஆயுள் சான்றிதழை ஆன்லைன் மூலமாக சமர்ப்பித்து கொள்ளலாம்.

ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் வழிமுறைகள்.

  • இதற்கு முதலில் 5 மெகாபிக்சல் கொண்ட கேமரா ஸ்மார்ட் போன் பயன்படுத்த வேண்டும்.
  • அடுத்ததாக ஓய்வூதியம் வழங்கும் ஆணையத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்து Aadhar Face Rd பயன்பாட்டை பதிவிறக்க வேண்டும்.
  • மேலும் https://jeevanpramaan.gov.in/package/dwonload இணையதளத்தில் இருந்து ஜீவன் பிரம்மாண்ட் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • அதில் ஓய்வூதியதாரரின் விவரங்களை நிரப்ப வேண்டும். பிரண்ட் கேமராவில் புகைப்படம் எடுத்து சமர்ப்பிக்கவும்.
  • மேற்குறிப்பிட்டுள்ள முறைகளைத் தவிர ஆதார் சாப்ட்வேர் மூலம் ஃபேஸ் ஆதன்டிகேசன் டெக்னாலஜி மூலமாகவும் ஆயுள்  சான்றிதழை சமர்ப்பித்து கொள்ளலாம்.