நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர். இதன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துள்ளன. எனவே UPI அல்லது நெட் பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்தும் போது உங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

UPI பரிவர்த்தனைகளில் ஏற்படும் தவறுகளால் சில நேரம் பணம் வேறு கணக்குக்கு சென்று விடும். அப்படி சென்றால், முதலில் நீங்கள் பணத்தை அனுப்பிய UPI செயலியில் உள்ள வாடிக்கையாளர் சேவையிடம் புகார் செய்ய வேண்டும். அங்கு உதவி கிடைக்கவில்லை என்றால், NPCI போர்ட்டலில் உள்ள ‘WHAT WE DO’ ஆப்ஷனிலோ/ அல்லது வங்கியிலோ நீங்கள் புகார் அளிக்கலாம். அல்லது bankingombudsman.rbi.org.in என்ற தளத்தில் புகார் செய்யலாம்.