புத்தாண்டில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை பெரும் அளவில் உயர்த்தப்போகிறது. மேலும் சம்பளம் உயர்வு குறித்த செய்தியையும் மத்திய அரசு வெளியிடவுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்துவது பற்றிய பேச்சு அதிகளவில் எழுந்து உள்ளது. தற்போது பென்சன் மற்றும் சம்பளம் உயர்வு குறித்த அறிவிப்பானது எப்போது வெளியாகுமென்ற தகவலை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

பழைய ஓய்வூதியத்தை திரும்பபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஊழியர்களின் குறைந்தபட்சம் சம்பள வரம்பை உயர்த்த அரசு திட்டமிட்டு உள்ளது. 2023ம் வருடம் மத்திய அரசு ஊழியர்களுக்கான பெரிய லாட்டரி நடைபெற இருக்கிறது. குறைந்தபட்ச சம்பளத்தை ரூபாய்.15,000ல் இருந்து ரூபாய்.21,000 ஆக அரசு நேரடியாக உயர்த்தும் என நம்பப்படுகிறது. ஊழியர்களின் குறைந்தபட்சமான சம்பள வரம்பை அதிகரித்த பின் ஓய்வூதியத்தில் பம்பர் அதிகரிப்பு இருக்கும். இதற்கு முன்பாக சென்ற 2014 ஆம் வருடம் இந்த வரம்பை அரசு உயர்த்தியது.

இப்போது புத்தாண்டில் மீண்டும் ஒரு முறை சம்பளத்தை உயர்த்த அரசு திட்டமிட்டு உள்ளது. சம்பள அதிகரிப்புடன் PF-க்கான பங்களிப்பும் உயரும். அதே சமயத்தில் ஓய்வூதியமும் அதிகரிக்கும். வருங்கால வைப்பு நிதியின் பங்களிப்பில் குறைந்தபட்ச சம்பளம் ரூபாய் 15,000 என கணக்கிடப்படுகிறது. இதனால் அதிகபட்சம் ரூபாய். 1250 மட்டுமே இபிஎஸ் கணக்கில் செலுத்தமுடியும். அரசு சம்பள வரம்பை அதிகரித்தால் பங்களிப்பும் அதிகரிக்கும். சம்பள உயர்வுக்கு பின் மாதாந்திர பங்களிப்பு ரூபாய். 1749 (ரூ. 21,000 இல் 8.33%) ஆகும்.